ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறைக்கு என்று அவசர அழைப்பு எண் ஒன்று இருக்கும். அந்த எண்ணை அழைத்து தங்கள் பிரச்சனையை கூறினால் காவல்துறையினர் விரைந்து உதவுவார்கள். அதன்படி மங்களூருவின் அவசர உதவி எண்ணான 112க்கு ஒரு நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய அந்த நபர் தான் ஒரு சிட்டி ஹாலில் மீட்டிங்கில் கலந்து கொள்ள வந்ததாகவும் மீட்டிங் முடிந்து வெளியே வந்த போது தனது காலணியை காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் காணாமல் போன தனது காலணியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார். இந்த புகாரையும் ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அந்த நபர் குறிப்பிட்ட மீட்டிங்கில் வேலை செய்தவர் தான் காலனியை  எடுத்துச் சென்றது தெரியவந்தது. அந்த நபரை கண்டுபிடித்த போதிலும் காலணியை மீட்க முடியவில்லை. இது போன்ற புகார்கள் காவல்துறையினரின் பணி சுமை பற்றிய கவலையை ஏற்படுத்தி உள்ளது