
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை ஆகினா,ன்ர். கடந்த 11ஆம் தேதி இவர்களுக்கு பெங்களூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் இருந்து வெளியே வந்து அவர்களுக்கு இந்து அமைப்பினர் உற்சாக வரவேற்பு கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஜாமினில் வெளியே வந்த அவர்கள் இருவரும் தங்கள் சொந்த ஊரான விஜயபுராவுக்கு சென்ற நிலையில் இந்து அமைப்பினர் அவர்களுக்கு சத்திரபதி சிவாஜி சிலை முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.