கோவை மாநகராட்சி 97வது வார்டு தி.மு.க பெண் கவுன்சிலர் நிவேதா தொடர்ச்சியாக 3 மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்காததை அடுத்து தகுதியிழக்கிறார். மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின் படி நடைபெறும். இதில் தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை என்றால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)-ன் படி உள்ளாட்சி பதவி பறிபோகும். அதன்பின் அடுத்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4) இன் படி சம்பந்தப்பட்ட நபர் கூட்டங்களில் பங்கேற்காதது பற்றி காரணம் ஏதாவது தெரிவித்திருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதை வெளியிடுவார்.

அந்த காரணத்தை தொடர்ந்து தகுதியிழந்தவர்கள் மீண்டும் தொடர்வது தொடர்பாக மாமன்ற கூட்டம் முடிவுசெய்யும். இந்த நிலையில் தமிழகத்தில் கோவை 97-வது வார்டு தி.மு.க பெண் கவுன்சிலரான நிவேதா கடந்த ஜனவரி, மார்ச், மே போன்ற 3 மாதங்களில் நடந்த கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொள்ளாததை அடுத்து இன்று முதல் தகுதி இழக்கிறார்.