கோவையில் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவியரை பெற்றோர்கள் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கிவிட்டு செல்லும்பொழுது சரி, மீண்டும் பள்ளியிலிருந்து திரும்பும்போதும் சரி முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் சீட் பெல்ட், தலைக்கவசம் அணியாமல் இருந்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. எனவே காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “21 நாட்கள் சவால்” என்ற புதிய திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அழைக்க வரும்பொழுது முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தியும் அதனை செயல்படுத்தி இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.