இந்தியாவிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து நாலு ஆண்கள் உட்பட 15 பேர் சுற்றுலா வந்தனர். நேற்று அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழரைப்பட்டி கிராமத்திற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் கோவிலில் ஒரு தம்பதியினர் தமிழ் கலாச்சாரப்படி மாலை மற்றும் மோதிரம் மாற்றி தங்களது காதலை வெளிப்படுத்தினர்.

பெண்கள் இந்திய கலாச்சாரப்படி சேலை அணிந்து தலையில் பூக்கள் சூடி, ஆண்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும் இருந்தனர். பின்னர் உணவு விருந்து நடைபெற்றது. இதில் கிராம பொதுமக்களும் வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர். மாலை மாற்றிக் கொண்ட தம்பதிக்கு பொது மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.