கோவாவின் வெண் மணல் கடற்கரைகள், சுறுசுறுப்பான இரவு வாழ்க்கை, வழிபாட்டுத் தலங்கள், உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள கட்டிடக்கலை ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சர்வதேச மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து கோவா வனத்துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, சுற்றுலாப் பயணிகள் வனத்துறை எல்லைக்குள் உள்ள அருவிகளுக்கு செல்ல இன்று தடை விதித்துள்ளது. அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வனத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தகவல் தெரிவித்துள்ளார்.