கோவா அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு அம்மாநில அரசு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. அதாவது வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 14 நீர்வீழ்ச்சிகளை பார்வையிட அனுமதிக்கும் உத்தரவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள மைனாபி நீர்வீழ்ச்சியில் சமீபத்தில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்.

இதனால், அருவிகள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் அருகே பார்வையாளர்கள் நுழைய வனத்துறையினர் கடந்த வாரம் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல முடியவில்லை.இந்நிலையில்  அந்த விதிகளை நீக்க கோவா அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதன் மூலம் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 14 நீர்வீழ்ச்சிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.