தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் பல முக்கிய சாலைகளில் நீரில் மூழ்கி கொசுக்கள் அதிக அளவில் பெருகியது இப்படி கொசுக்கள் அதிகமாக இருந்தால் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது இதனால் ஆஸ்பிரின் டிக்கிலோனா போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அலர்ஜி எதிர்ப்பு மருந்துகளை வழக்கமான மருத்துவ பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து டெல்லி மருந்து கட்டுப்பாட்டு துறை டெல்லியில் அனைத்து வேதியலாளர் சங்கங்களின் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதன்படி மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது இதை கடைபிடிக்காதவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் மனித ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் செல்களை அழிப்பதால் கடுமையான கண்காணிப்பு தேவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.