தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சர்வானந்த். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதன் பிறகு தமிழில் வெளியான கணம் என்ற திரைப்படத்திலும் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சர்வானந்துக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில் அவருடைய நீண்ட நாள் காதலியான ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ரக்ஷிதா ரெட்டி அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்.

இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவரின் உறவினர் எனவும் ரக்ஷிதா ரெட்டியின் தந்தை ஆந்திர உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் சார்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டியின் திருமண நிச்சயதார்த்தத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் அவருடைய மனைவி உபசானா கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்று தெலுங்கு திரை உலக பிரபலங்கள் பலரும் இவர்களது நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.