தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோரத்தினம்(95) இன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இவர் சுமார் 50 ஆண்டுக்காலம் தமிழ் சினிமாவில்,1200 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துள்ளார். சுந்தர்.சி கதாநாயகனாக அறிமுகமான தலைநகரம் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்