தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பொறுப்பேற்க உள்ள தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழா முடிந்த கையோடு கோட்டைக்குச் சென்று தனது அதிரடி சரவெடியை ஆரம்பிக்க உள்ளார்.

முதலமைச்சராக அவர் இடப்போகும் அந்த ‘முதல் கையெழுத்து’ என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தவெக-வின் தேர்தல் வாக்குறுதியான ‘மகளிர் வெற்றிப் பயணம்’ திட்டம்தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக இருக்கும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்க வழிவகை செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, இல்லத்தரசிகளின் சுமையைக் குறைக்க வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் மெகா திட்டத்திலும் விஜய் இன்று கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்ற முதல் நாளிலேயே பெண்களுக்கும், சாமானிய மக்களுக்கும் பலன் தரும் இந்த ‘இரட்டை அதிரடி’ அறிவிப்புகள் மூலம், தவெக அரசு தனது மக்கள் நலப் பணியை மாஸாகத் தொடங்குகிறது.