தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் தற்போது  பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வரும்  நிலையில் புதுமுக நடிகை ரேவதி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஆகஸ்ட் 16, 1947 என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சவுத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஆங்கிலேயரை எதிர்த்து போராடும் ஒரு கிராமத்து  இளைஞரின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலின் லிரிக்ஸ் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் கௌதம் கார்த்திக் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பாடல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.