
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் சிறப்பு பண்டிகை நாட்களில் கூடுதலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது கோடை விடுமுறையில் ரயில்வே துறையின் போக்குவரத்து அபரிதமாக அதிகரிக்கிறது. இதனைத் தொடர்ந்து கூட்ட நெரிசலை சமாளிக்க 380 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவை பாட்னா, டெல்லி, விசாகப்பட்டினம், மும்பை போன்ற முக்கிய நகரங்கள் வழியாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. முக்கிய வழித்தடங்களில் 6369 பயணங்கள் இயக்கப்படும் என்றும் இது கடந்த ஆண்டை விட 1770 பயணங்கள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக கர்நாடகா பிராந்தியத்திற்கு சேவை செய்யும் தென்மேற்கு ரயில்வே மண்டலங்களில் அதிகபட்சமாக 1290 பயணங்களை இயக்குகிறது.