இந்தியாவில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டுக் கடன் பெற தகுதியுள்ள நபர்களுக்கு கூட சில சமயங்களில் கடன் கிடைக்காமல் போகிறது. அதோடு வீடு கட்ட அதிக கடன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் அதிக பணம் கிடைப்பதில்லை. இந்நிலையில் வீட்டுக் கடனை எப்படி எளிதான முறையில் வாங்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் உங்களுடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும். சிபில் ஸ்கோர் 300 முதல் 900-க்கு மேல் இருந்தால் வீட்டுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் எழாது.

அதிக தொகை பெற வேண்டும் என விரும்பும் நபர்கள் உங்களுடன் மற்றொரு நபரையும் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பாக கிடைக்கும். ஏனெனில் இரண்டு நபர்கள் சேர்ந்து வீட்டுக் கடனை கட்டுவார்கள் என்ற நம்பிக்கை வங்கிக்கு வரும் என்பதால் அதிக தொகை கிடைக்கும். கடன் காலத்தை அதிகரிப்பதன் மூலம் வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் இஎம்ஐ கட்டணத்தை குறைத்து உங்களுக்கு அதிக கடன் கிடைக்க வழிவகை செய்கிறது. மேலும் உங்களிடம் கிரெடிட் கார்டு கடன் நிலுவையில் இருந்தால் முதலில் அதை சரி செய்ய வேண்டும். நீங்கள் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை செலுத்திய பிறகு கடன் பெற விண்ணப்பித்தால் கண்டிப்பாக ஒரு நல்ல தொகை கிடைக்கும்.