மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தபால் நிலையங்களில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் 15 வருடங்களில் முதிர்ச்சி அடையும். அதற்கு முன்பாக நீங்கள் பணத்தை எடுக்க நினைத்தால் எடுக்க முடியாது. நீண்டகால முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் சிறந்த திட்டமாக இருக்கும். ஒருவேளை முதலீட்டாளர்களுக்கு இடையில் அவசரமாக பண தேவை ஏற்பட்டால் திரும்ப பெரும் விதியின் கீழ் 40% பணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் வரி விலக்கு கிடைப்பதோடு பாதுகாப்பான முதலீடு  மற்றும் வருமானத்திற்கும் உத்தரவாதமான திட்டமாக இருக்கிறது.