பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான இருக்கையை பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்குகிறார்கள். பயணிகளுக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகமும் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது. அந்தவகையில்  ரயில்களில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர் ஒரே பர்த்தில் அட்ஜஸ்ட் செய்து படுத்து தூங்க வேண்டிய நிலை இருந்தது.

இதனை சரி செய்து பேபி பர்த்தை ரயில்வே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை நீங்கள் ரயில் முன்பதிவின்போதே புக் செய்து கொள்ளலாம். பின்னர் ரயிலில் டிடிஆர் சாதாரண பர்த்தில் இணைக்கும் வகையிலான சிறிய பர்த்தினை வழங்குவார். மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளவும்.