கடந்த செப்டம்பர் மாதம்  மின்சார கட்டணத்தை தமிழக அரசு 10 சதவீதம் அளவில் அதிகரித்தது .  மத்திய அரசின் நிர்பந்தத்தின் காரணமாகவே தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மின்கட்டண உயர்வானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொதுவாக கோடைகால தொடக்கம் முதல் கோடை காலம் முடியும் வரை அதிக அளவில் ஏசி பயன்பாடு மற்றும் கூடுதல் காற்றாடி பயன்பாடுகள் காரணமாக மின் கட்டணம் அதிகமாக வரும்.

தற்போது கோடை காலம் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான மின் கட்டணம் கடந்த ஆண்டு காட்டிலும் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு போதுமான காற்றோட்ட வசதி இல்லாத காரணத்தினால் கட்டாயமாக ஏசியை பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்கள். இதனால் மின் கட்டணம் வழக்கத்தை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.