கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

2017 ஆம் ஆண்டு நீலகிரி ஊட்டி அருகே நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டு தற்போது 3 பேரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பின்பு மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் இந்த வழக்கானது மாற்றப்பட்ட நிலையில்,  கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுகவின் அப்போதைய எம்எல்ஏ ஆறுகுட்டி என்பவரிடம், கோடநாடு பங்களாவில் மேலாளராக இருந்தவர்கள், சசிகலாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களிடம், கிட்டத்தட்ட 300 பேரிடம் விசாரணையானது நடைபெற்று வந்தது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்சன் செல்வா, மணிகண்டன், ஜெயசீலன் ஆகிய 3 பேரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கர்சன் செல்வா இவர் கோடநாடு மேலாளரின் நண்பரும், அப்போதைய அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவராகவும் இருந்தவர் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் மணிகண்டன் என்பவரிடமும், கோத்தகிரியில் உள்ள கடைக்காரர் ஜெயசீலன் ஆகிய மூன்று பேரிடம் காவலர் பயிற்சி பள்ளியில் விசாரணை நடைபெற்று வருகிறது..