ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கும், தொடர் நாயகன் விருது பும்ராவுக்கும் வழங்கப்பட்டது. இதில் விராட் கோலி கோகினூர் வைரத்தை போன்று மதிப்பு மிக்கவர் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பும்ராவை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கோஹினூர் வைரத்தை விட அவர் மதிப்பு மிக்கவர் என்று பாராட்டியுள்ளார். அதாவது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்தக்கூடியவராக பும்ரா இருப்பதாகவும், அழுத்தமான சூழ்நிலையில் கூட சிறப்பாக விளையாடுகிறார் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். மேலும் புத்திசாலித்தனம் மற்றும் அற்புதம் ஆகிய இரண்டு வார்த்தைகளும் அவருக்கு பொருந்தக்கூடியவை என்று பாராட்டியுள்ளார்.