பல்கலைக்கழக மாணவியிடம் ஆபாசமாகப் பேசி, தேர்வு வினாத்தாளை கசியவிடுவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டிய உதவிப் பேராசிரியர் பரம்ஜீத் சிங் என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். லக்னோ பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியரான இவருடைய ஆடியோ கிளிப் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மெகா வைரலானது. “டார்லிங், உனக்காகப் பேப்பர் ரெடி பண்ணிட்டேன், எக்ஸாமுக்கு முன்னாடி இங்க வா” என்று அவர் பேசியது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ठरकी प्रोफेसर और छात्रा की बातचीत 👇
ठरकी प्रोफेसर- सब ठीक है ना?
छात्रा- जी सर
प्रोफेसर- कोई हेल्प चाहिए तो बताना ‘डार्लिंग’
छात्रा- ठीक है सर
प्रोफेसर – तुम्हारे लिए पेपर आउट करा दिया है, एग्जाम से पहले घर से आ जाओ
छात्रा- मैंने पढ़ाई कर ली है सर, पेपर की जरूरत नहीं है… pic.twitter.com/HBHNI3uPzW
— Priya singh (@priyarajputlive) May 15, 2026
இந்த விவகாரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ஹசன்கஞ்ச் போலீசார் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து பேராசிரியரை விசாரணைக்காகக் கூட்டிச் சென்றனர். அவர் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படும் போது, ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் ஏபிவிபி (ABVP) அமைப்பினர் செருப்படி கொடுக்க வேண்டும் என முழக்கமிட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் மாஸ் போராட்டம் நடத்தினர்.
துணைவேந்தர் ஜே.பி.சைனி இதுகுறித்து 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டை மறுத்துள்ள பேராசிரியர், இது உள் அரசியல் பழிவாங்கல் என்று கூறியுள்ளார்.
