அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது என்றார். அதாவது இன்று சென்னை பனையூரில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழாவிற்கு காவல்துறையினர் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஜெயக்குமார் பதில் அளித்தார்.

அப்போது திமுகவுக்கு தமிழக வெற்றி கழகத்தை பார்த்து பயம் என்றார். அதோடு விஜயை கண்டு  திமுக அஞ்சுகிறது என்று கூறிய ஜெயக்குமார் நாட்டில் கொடியேற்றும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது என்று கூறினார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி சென்னை பனையூரில் இன்று அறிமுகமாகும் நிலையில் காலை 11 மணிக்கு நடிகர் விஜய் கொடியேற்றுகிறார். இதைத்தொடர்ந்து கட்சிப்பாடலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜெயக்குமார் திமுக விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாக கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.