நாட்டின் அனைத்து துன்பம் துயரங்களுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சிகள் தான் காரணம் என்று சீமான் விமர்சித்துள்ளார். நாட்டில் முறையற்ற நிர்வாகம், ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு இக்கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்று தமிழகத்தில் உள்ளவர்கள் (திமுக, அதிமுக) இதை தட்டிக் கேட்கவில்லை என விமர்சித்த சீமான், கொசுவை ஒழிக்க முடியாத இவர்கள் எப்படி ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்.