நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு பல சேவைகளை செய்து வருகின்றன. அதன்படி வேலூர் மாவட்ட அரசியல் கட்சி பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவ முகாம்கள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கைவினை கலைஞர்களுக்கு உதவும் விதமாக சிறப்பு பயிற்சிகள் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை அதாவது பிப்ரவரி நான்கு வரை வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் கே வி குப்பம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் நபர்களுக்கு 500 ரூபாய் ஒரு நாளைக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் இந்த பயிற்சியில் முடிவில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஏசி சண்முகம் கைவினை கலைஞர்களின் தொழில் விருத்திக்காக ஒரு லட்சம் ரூபாய் முதல் தவணையாக வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படும் என்றும் இரண்டு லட்சம் ரூபாய் இரண்டாம் தவணையாக 5% வட்டி விகிதத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.