பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டு, அந்நாட்டு சுகாதாரத் துறையின் அவலநிலையை அம்பலப்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை அரங்குகளில் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் உயிருக்குப் போராடிய நிலையில், அங்கிருந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

மருத்துவமனையில் உள்ள விஐபி அறைகளுக்கு மட்டும் தடையின்றி மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்கள் இயங்குவதாகவும், ஆனால் உயிர்காக்கும் அறுவை சிகிச்சை அரங்குகளுக்கு எரிபொருள் இல்லை எனக்கூறி மின்சாரம் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தமருத்துவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த பாரபட்சமான அணுகுமுறை அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
<a href=”http://

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொது மருத்துவமனைகளின் நிர்வாகம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துப் பெரிய அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன. சாதாரண நோயாளிகளின் உயிரோடு விளையாடும் இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகள் கண்டிக்கத்தக்கவை எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வசதிபடைத்தவர்களுக்கான சேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது ஒரு நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தான் மருத்துவமனைகளில் நிலவும் அதிகாரப் போக்கையும், சமத்துவமின்மையையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.