பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காஜா மொய்தீன், மலேசியாவில் நடைபெற்ற ‘ஸ்டார் நைட்’ கலை நிகழ்ச்சியின் போது தனக்கு நேர்ந்த ஒரு அதிரடியான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அனைவரும் பேருந்து மூலம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் எல்லைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது மதுபான பாட்டில்கள் சிலவற்றைத் தன்னுடன் எடுத்துச் சென்ற காஜா மொய்தீனுக்கு, சிங்கப்பூர் சட்டத்தின் கடுமை அப்போது தெரிந்திருக்கவில்லை. எல்லையில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்ட போது, பேருந்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல பிரபல நடிகர்கள் இருந்ததைக் கண்டு உற்சாகமடைந்தனர். நடிகர்களுடன் புகைப்படம் எடுப்பதிலும், அவர்களை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டிய அதிகாரிகள், வழக்கமான தீவிர சோதனையை மேற்கொள்ளாமல் பேருந்தை அனுமதித்தனர்.
<a href=”http://

“>
இதனால் எந்தவித சிக்கலும் இன்றி அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர். சிங்கப்பூர் சென்றடைந்த பிறகு அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் நடந்ததைக் கூறியபோதுதான், காஜா மொய்தீன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் மதுபானங்களைக் கடத்தி வருவது கடுமையான குற்றம் என்றும், அதற்கு சுமார் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் விளக்கினார்.

ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் உடன் இருந்த காரணத்தால் மட்டுமே அதிகாரிகள் சரியாகச் சோதனை செய்யவில்லை என்பதும், அந்த செல்வாக்கால்தான் தான் மிகப்பெரிய சட்டச் சிக்கலில் இருந்தும் சிறைத் தண்டனையிலிருந்தும் தப்பித்ததாகவும் காஜா மொய்தீன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.