தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கென் கருணாஸ், தற்போது ‘யூத்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் பள்ளிப் பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பார்வதா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டனர். விழாவில் தனுஷ் பேசுகையில், “‘அசுரன்’ படப்பிடிப்பின் போது, கென் கருணாஸை பார்த்தவுடன், ‘இவன் உருண்டையாக இருக்கிறான், மகனாக நடிக்க சரிப்பட்டு வரமாட்டான்’ என்று வெற்றிமாறனிடம் சொன்னேன். ஆனால், வெற்றி அவனது திறமையை நம்பினார். படப்பிடிப்பின் முதல் காட்சியிலேயே கென் நடித்ததைப் பார்த்து வியந்து போனேன். எந்தத் தயக்கமும் இன்றி அவனது நடிப்பு இருந்தது. கென்னைக் கண்டுபிடித்த பெருமை முழுக்க முழுக்க வெற்றிமாறனையே சாரும்” என்றார்.
#Dhanush:
"During #Asuran shoot, when Ken came first, i didn't believe in him. But VetriMaaran only believed in him🤞. Similarly when he said that he is going to direct #Youth, i asked him to wait for few years🤝. But Ken was very confident. Ken, you proved me wrong and I'm happy… pic.twitter.com/WBoQX3tku7— AmuthaBharathi (@CinemaWithAB) March 13, 2026
மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் இருவரும் ‘பப்ஜி’ விளையாடும் நண்பர்கள். அவனுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த விளையாட்டை விளையாடுவேன். கென் எனக்கு மகனைப் போன்றவன் என்று சொன்னேன். ஆனால் லப்பர் கண்டுபிடிப்பில் ஒரு வசனம் வரும். இல்லையென்றாவது கூறி விடுங்கள் ஆனால் அது மாதிரி மட்டும் என்று கூறி விடாதீர்கள் என்று. இப்போது சொல்கிறேன் கென் என்னுடைய மகன் மாதிரி அல்ல என்னுடைய மகன் தான். கென் பேசும்போது சொன்னீர்கள் தெரிந்தோ தெரியாமலோ நான் இயக்குவதற்கு சொல்லிக் கொடுத்து விட்டேன் என்று. ஆனால் தெரிந்துதான் நான் சொல்லிக் கொடுத்தேன். ஒருவரை பார்க்கும் போதே தெரியும் உருப்படுமா இல்லை உருப்படாதா என்று கூறினார்.
மேலும் முந்தைய காலங்களில் மூத்த நடிகர்களைப் பார்த்து கற்றுக்கொண்டோம். ஆனால், இன்றைய தலைமுறையினரைப் பார்க்கும்போது, நாம் நேரத்தை வீணடித்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. கென்னின் இந்த ‘யூத்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
