தளபதி விஜய்யின் மகள் திவ்யா சாஷாவின் பட்டமளிப்பு விழா சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொள்ளாதது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அவர் தனது அடுத்த படமான ‘கோட்’ படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், மகளின் இந்த முக்கியமான தருணத்தில் நேரில் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தந்தை இல்லாத குறையை போக்கும் வகையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இந்த விழாவில் கலந்து கொண்டு தனது தங்கையை உற்சாகப்படுத்தினார். தற்போது சமூக வலைதளங்களில் ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா இருவரும் இணைந்து இருக்கும் வீடியோ ஒன்று மிகவேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், பட்டமளிப்பு உடையுடன் இருக்கும் திவ்யா சாஷாவை சஞ்சய் அன்புடன் அரவணைப்பதும், இருவரும் மகிழ்ச்சியாக சிரிப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய் நேரில் வராதது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தாலும், அண்ணன் – தங்கைக்கிடையிலான இந்த பாசப்பிணைப்பைக் கண்டு நெகிழ்ச்சியடைந்து, வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
