கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணத்திற்கு விராட் கோலி  பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியுள்ளதாகவும், தோனி பைக்கை பரிசாக வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.எல்.ராகுல் அதியா ஷெட்டி திருமணம்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலுக்கும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை திங்கள்கிழமை (ஜனவரி 23) கண்டலாவில் உள்ளரங்க விழாவில் திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் இருவரின் திருமணத்திற்கு பிறகு விளையாட்டு உலகிலும், சினிமா உலகிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த இருவரின் திருமணத்திற்கு நண்பர்களின் பரிசு மழை பொழிந்தது.

கே.எல் மற்றும் அதியாவின் திருமணத்தை முன்னிட்டு பலர் விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியுள்ளனர். இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட பல மூத்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் கோஹ்லி பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரின் விலை 2.17 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி மிகவும் சிறப்பான பரிசை வழங்கியுள்ளார்.

மகேந்திர சிங் தோனிக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும். இதை நாம் அனைவரும் அறிவோம். தோனியிடம் டஜன் கணக்கான பைக்குகளின் அற்புதமான தொகுப்பு உள்ளது.இந்த ஆர்வத்தை மனதில் வைத்து தோனி, ராகுல் மற்றும் அதியாவின் திருமணத்தை முன்னிட்டு புதுமணத் தம்பதிகளுக்கு கவாஸாகி நிஞ்ஜா பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். சுவாரஸ்யமாக, இந்த பைக் தோனியின் சொந்த பைக் சேகரிப்பில் இருந்து வந்தது, மேலும் இந்த பைக்கின் விலை சுமார் 80 லட்சம் ரூபாய்..