
கடந்த 24 ஆம் வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோல்வியை தழுவிய லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கோ மைதானத்திலேயே கடுமையாக சாடினார். இது பெரிய சர்ச்சையாக மாறியது. இதனால் வருத்தம் அடைந்த கே.எல் ராகுல் அணியை விட்டு வெளியேறினார். பின்னர் டிசம்பரில் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். கே.எல் ராகுல் இடத்தை நிரப்புவதற்கு லக்னோ அணி வீரர்களை தேடிய நிலையில் ரிஷப் பண்டை 27 கோடி கொடுத்து வாங்கியது. இந்த சூழலில் நடப்பாண்டில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டிடம் மைதானத்தில் வைத்து பயிற்சியாளர் மற்றும் உரிமையாளர் கோயங்கோ பேசியது குறித்து விவாதம் செய்து வந்தார்கள். இது தொடர்பான போட்டோவும் வீடியோவும் வைரலாகி வந்தது. ஆனால் போட்டி முடிந்ததுமே லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று வீரர்களோடு பேசியுள்ளார். அப்போது இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் சில நல்ல விஷயங்கள் நடந்துள்ளது. நாம் அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். நம்முடைய அணி இளம் வீரர்களை கொண்டது. எனவே நல்ல விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராகுவோம்” என்று தான் உரையாடி உள்ளார்.