
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி டெல்லி செல்கிறார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கிறார். மத்திய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரையும் சந்தித்து அழைப்பிதழ் வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி. தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 31 வரை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.