அருண் மாதேஸ்வரன் டைரக்டில் தனுஷ் இப்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகக்கூடிய இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வரும் நிலையில், தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக “கேப்டன் மில்லர்” டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அடுத்த வாரத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் அதில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.