கேப்டன் என்று தமிழ் சினிமா வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் அன்பாக அழைக்கப்படுபவர் விஜய்காந்த். இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காலமானார் .இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தொண்டர்கள் ரசிகர்கள் என அனைவரும் அஅவர் வீட்டின் முன்வந்து படுத்திருந்து அஞ்சலி செலுத்தும் அளவிற்கு பிரபலமாக வாழ்ந்து வந்துள்ளார் கேப்டன்.

இந்த நிலையில் சில திரைப் பிரபலங்கள் தங்களுடைய வீடியோக்கள் மூலமாகவும் பதிவுகள் மூலமாகவும் விஜயகாந்த்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி பிரபலமுமான மதுரை முத்து சமூக வலைதள பக்கத்தில் விஜயகாந்த் குறித்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய பெற்றோர் இறந்தபோது கூட நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை. கேப்டன் மீது அப்படி ஒரு ஈர்ப்பை அவர் சம்பாத்திருப்பது ஆச்சரியமான விஷயம்.  தமிழ்நாட்டில் பிரச்சினை என்ன என்றால் நல்ல தலைவர் கிடைக்கும்போது அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு இறப்பது தான். எந்த ஒரு பிரபலத்தின் இறப்பின் போது இப்படி ஒரு வீடியோவை நான் வெளியிட்டதில்லை என்று கண்ணீரோடு பதிவிட்டுள்ளார்.