கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் விஜயலெட்சுமி (27) தனது இரு குழந்தைகளை கொலை செய்த பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயலெட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி பிரிண்டா (4) என்ற மகளும், புவன் (1) என்ற மகனும் உள்ளனர். இவரது கணவர் பெங்களூருவிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், விஜயலெட்சுமி நேற்று முன்தினம் மாலை தனது இரு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயலெட்சுமி இந்த துயரமான முடிவு எடுத்தாரா அல்லது வேறு காரணமா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
