உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கர்வா சௌத் கொண்டாட்டத்தின்போது வன்முறை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒரு பெண், அவரது கணவர் மற்றும் மகன் மீது மூவர் கொண்ட கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் கேமராவில் பதிவாகி, அதன் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அறிக்கையின்படி, சம்பவம் காஜியாபாத் மாவட்டத்தின் கோட்வாலி நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு, ஒரு பெண் தனது கணவர் மற்றும் மகனுடன் கைகளில் மெஹந்தி போடச் சென்றிருந்தார்.
அப்போது, ஒரு ஆண் தனது மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதியில் வந்துள்ளார். அவரது வாகனத்தின் முகப்பு விளக்கு நேரடியாக அந்தப் பெண்ணின் கண்களில் பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண் வாகனத்தின் விளக்கை அணைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் அதை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் கணவர் பைக் விளக்கை அணைத்தபோது, இருவருக்குமிடையே தகராறு வெடித்தது. பின்னர், பைக் ஓட்டுநர் தனது இரண்டு நண்பர்களை அழைத்து வந்து, பெண், கணவர், மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
#गाजियाबाद:करवा चौथ की खरीदारी के बीच बाजार में मारपीट की घटना,महिला समेत परिवार पर हमला
> गाजियाबाद मे करवा चौथ की रौनक के बीच घंटाघर स्थित चौपला मंदिर के पास देर शाम उस समय हंगामा मच गया जब मेहंदी लगवाने आई एक महिला के साथ उसके पति और बेटे पर दबंगों ने हमला कर दिया
> बताया जा… pic.twitter.com/a7MNPESEV7
— NEWSNOWLIVE (@newsnowlivee) October 10, 2025
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காட்சிகளின் அடிப்படையில், சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, ஒருவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள இரு சந்தேக நபர்களை பிடிக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கர்வா சௌத் பண்டிகை இந்தியா முழுவதும் அக்டோபர் 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பக்தியுடன் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்கள் கணவர்களின் நீண்ட ஆயுள் மற்றும் நலனுக்காக சூரிய உதயம் முதல் சந்திரோதயம் வரை விரதம் நோற்பது வழக்கம். மேலும் அன்றைய தினத்தில் இந்த சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
