கனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கேல் சவோய். இவருக்கு லாட்டரியில் இந்திய மதிப்பில்  6,07,86,619 ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கூரையை பிய்த்து கொண்டு அதிர்ஷ்டம் கொட்டிய நிலையில் தன்னுடைய வேலையை உடனடியாக அவர் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பரிசு பணத்தை வைத்து தன்னுடைய ஓய்வு காலத்தை வசதியாக அனுபவிக்க முடியும். அதிர்ஷ்டம் அடித்தவுடன் முதலில் என் சகோதரியிடம் தான் தகவலை கூறினேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.