ரயிலில் பயணம் செய்த ஒரு நபர் வயதான ஒருவரிடம் இருந்து மொபைல் போனை திருட முயன்று சக பயணிகளிடம் சிக்கியுள்ளார். அவரை பயணிகள் தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதிக கூட்ட நெரிசல் நிறைந்த காம்பார்ட்மெண்டில் இந்த நபர் மட்டும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக நோட்டுமிட்டுக்கொண்டே இருந்துள்ளார்.

இதனை கவனித்த சக பயணிகள் அவர் என்ன செய்கிறார் என்பதை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வயதான நபர் ஒருவரிடம் இருந்து நைசாக மொபைல் போனை திருடியுள்ளார். இதனை பார்த்த சக பயணிகள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கினர்.

இது தொடர்பான காணொளி தான் சமூக வலைதளத்தில் தற்போது வைரல் ஆகி உள்ளது. இது ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.