தமிழகத்தில் கோவில் நிலங்களைப் பற்றி அரசியல் களத்தில் புதிய விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “அண்மையில் எடப்பாடி பழனிசாமி கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

ஆனால் பாஜக நிலைமையென்பது வேறு. கோவில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நீண்டகாலக் கோட்பாடு. ஹெச்.ராஜா அவர்கள் பல ஆண்டுகளாக இதுபற்றி தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகம் முழுக்க சுமார் ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் காணாமல் போய்விட்டன. இதனை முதலில் மீட்டெடுக்க வேண்டும்,” என்றார்.

மேலும், “கோவில் நிலங்களில் தற்போது வாழ்பவர்கள் கட்டணம் செலுத்துகிறார்களா? 99 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல் இருப்பது போல் பல கேள்விகள் எழுகின்றன. இந்த நிலத்தை முறையாக நிர்வகிக்க திட்டமிட வேண்டும்.

ரெகுலரைஸ்பண்ணும் விதிமுறைகள் இருக்கின்றன, ஆனால் முதலில் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாக்க வேண்டும்,” என அண்ணாமலை கூறியுள்ளார். இதில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் நிலைப்பாட்டில் பாஜக மாறுபட்ட கருத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.