புதுடெல்லி: தேசிய அரசியலில் பெரும் அதிரடியாக, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகங்களான ராகவ் சத்தா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் ஆகிய மூன்று மாநிலங்களவை எம்.பி.க்கள் அக்கட்சியிலிருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைத்துக் கொண்டனர். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆம் ஆத்மி கட்சித் தலைமை நெருக்கடிகளைச் சந்தித்து வரும் வேளையில், கட்சியின் ‘பிளானர்’ என்று அழைக்கப்படும் சந்தீப் பதக் மற்றும் ராகவ் சத்தா போன்ற மூத்த தலைவர்களின் இந்தத் திடீர் விலகல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கூடாரம் காலியாவது தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.