சென்னை அசோக் நகரில் மாரியப்பன்-சரிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் அனைவரும் தூங்குவதற்கு இடம் இல்லாததால் சிலர் வெளியே படுத்து தூங்கியுள்ளனர். அப்போது ஒரு கார்  திடீரென வேகமாக வந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களின் காலில் ஏறியது. இதில் 4 பெண்கள் உட்பட 7 பேரின் கால்கள் நசுங்கியது.

இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த வைசாலி பாட்டில் என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதிகாலை நேரத்தில் google மேப் பார்த்து காரை ஓட்டி வந்த நிலையில் அந்த குறுகலான தெருவில் சந்து இருப்பது தெரியாமல் காரை அவர்கள் மீது ஏற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.