இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டே வேலையை முடித்து விடுகின்றனர். அதேசமயம் பண பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்லும் காலம் போய் தற்போது கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல வசதிகளும் அவ்வபோது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கூகுள் பே பயனர்கள் இனி Rupay கிரெடிட் கார்டு மூலமாகவும் யு பி ஐ பேமென்ட்களை செய்யலாம். கடந்த வாரம் கூகுள் பே மற்றும் ரூபே நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் நேற்று காலை முதல் இந்த வசதி அமலுக்கு வந்துள்ளது. PayTm , Phone pe ஆகிய நிறுவன அப்ளிகேஷன்களில் இந்த வசதி ஏற்கனவே அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கும் இப்படியான சேவை விரிவு படுத்த வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.