தமிழகத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் வியாழக்கிழமை. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் அதற்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிறு. இதனால் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கினால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துவிடும் என்று பலரும் எதிர்பார்த்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது அரசு அந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.

அதாவது நவம்பர் ‌1-ம் தேதி அரசாங்கம் பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,500 அரசு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு சென்று வருபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.