
தமிழகம் முழுவதும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது நாளை வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை. இதேபோன்று ஏப்ரல் 14ஆம் தேதி வருகிறது திங்கட்கிழமை தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு பொது விடுமுறை. இதற்கிடையில் சனி ஞாயிறு இரண்டு தினங்களும் வழக்கம் போல் விடுமுறை. இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாள்.
இந்நிலையில் வியாழக்கிழமை விடுமுறை ஆக இருக்கும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக சனி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இன்றைய தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பொது மக்களுக்கு இந்த விடுமுறை மிகவும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளதோடு மாணவர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.