தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கான தேர்வு கால அட்டவணை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் பொதுத்தேர்வுகளுக்கான முழுமையான கால அட்டவணை அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதிபட தெரிவித்தார். மேலும், இந்த அறிவிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி வெளியிடப்படுவதாகவும் கூறினார்.

மேலும், பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ நாட்காட்டியில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் பற்றிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டுத் தேர்வுகள், டிசம்பர் 15 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னதாகவே திட்டமிட உதவுவதோடு, பள்ளி நிர்வாகங்களுக்கும் வழிகாட்டுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“>