
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. திமுக கட்சி அதே கூட்டணியில் களம் காணும் நிலையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி களம் காணும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவுடன் இன்னும் பல கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்றும் மெகா கூட்டணியுடன் களம் காண்போம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் தற்போது அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக அந்த கட்சியின் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து பெரம்பலூரில் இந்த கட்சியை போட்டியிட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்த பிறகு கூட்டணி குறித்து உறுதிப்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் கோவையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ரோடு ஷோவில் இந்திய ஜனநாயக கட்சியினர் கலந்து கொள்வார்கள் என்று பாரிவேந்தர் அதிகாரப்பூர்வமாக எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.