ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு  பணத்திற்கு உள்ள மதிப்பு. வெளிநாட்டில் சிறிய அளவில் சம்பளம் வாங்கினாலும் சொந்த நாட்டில் அதன் மதிப்பு அதிகமாக இருக்கும் . இதனால் துபாய், சவுதி, குவைத்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பலரும் இந்தியாவிலிருந்து சென்று வேலை செய்து வருகிறார்கள். இந்த நாடுகள் அனைத்தும் எண்ணெய் வளம் அதிகம் இருப்பதால் செல்வம் கொழிக்கும் நாடுகளாக திகழ்கின்றன. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்வதற்கு ஏராளமான சம்பளத்தை இந்த நாடுகள் கொட்டி கொடுக்கின்றன.

வெளிநாட்டிலிருந்து குவைத் வந்து தங்கி வேலை செய்பவர்கள் பொதுவாக வேலை விசாவை தான் வாங்க நேரிடும். இதற்கு குறிப்பிட்ட ஆண்டுகள் காலக்கட்ட நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதுவரை அங்கு தங்கி வேலை செய்து கொள்ளலாம். அதன் பிறகு விசாவின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். இல்லை என்றால் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும். இந்த நிலையில் குவைத் நாட்டில் தங்கி வேலை செய்பவர்கள் தங்களிடம் உள்ள வேலை விசாவில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால் அது நேரடியாக செய்ய முடியாது.

இது குறித்து புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது குவைத் நாட்டிற்கான வேலை விசாவின் பெயர், பிறந்த தேதி, சொந்த நாட்டின் பெயர் போன்றவற்றை திருத்தம் செய்ய வேண்டும். முதலில்  Ashal service மூலம் விசாவில் ரத்து செய்ய வேண்டும். அதுவும் வேலை வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் ரத்து செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புதிய வேலை விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில் உரிய திருத்தங்களோடு விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி வேலை செய்பவர்கள் தங்களுடைய வேலை விசாவை ரத்து செய்ய வேண்டும் வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி வேலை செய்வோர் தங்களின் வேலை விசாவை ரத்து செய்ய வேண்டும் என்றால் அதற்கான ஆன்லைன் வசதியும் குவைத் அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதில் சென்று உரிய விவரங்களை கொடுத்து விசா ரத்து செய்து கொள்ளலாம்.