குவைத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விரிவாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் நிவாரண பணிகளை மேற்பார்வையிடுவதற்கும் இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்புவதை விரைவுப்படுத்துவதற்கும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் விரைவில் குவைத் செல்ல உள்ளனர். அதனைப் போலவே இறந்த இந்திய குடிமக்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாய் கருணைத்தொகை வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.