கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுபாலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவசங்கரி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஈஸ்வரன் சென்றுள்ளார்.

அப்போது சிவசங்கரி சொத்து முழுவதையும் என் பெயரில் எழுதி கொடுத்தால் தான் உன்னோடு வாழ வருவேன் என கூறியுள்ளார்.

அதற்கு ஈஸ்வரன் நமக்கு குழந்தை பிறந்தவுடன் எல்லா சொத்தையும் குழந்தை பெயரில் எழுதி வைக்கிறேன் என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிவசங்கரி தனது உறவினர்களுடன் சேர்ந்து ஈஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

மேலும் அவரது வீட்டையும் அடித்து சூறையாடி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.