குழந்தை பிறந்த உடனே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பிக்சட் டெபாசிட் செய்யும் ‘சிக்கிம் சிசு சம்ரித்தி யோஜனா’ திட்டத்தை ம சிக்கிம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரில் பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் நிரந்தரமாக வைப்புத் தொகை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கு 18 வயதாகும் பொழுது பிக்சட் டெபாசிட் முதிர்ச்சியடையும் என்றும் அதன் பிறகு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ம் வருடம் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஹிமாலயன் ஸ்டேட் நாட்டில் தான் மிக குறைந்த மக்கள் தொகை உள்ளது.  10 லட்சம் மக்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். மக்கள் தொகை பெருக்கத்துக்காக தம்பதிகள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள மாநில அரசு பலகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதில் இதுவும் ஒன்று.