இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் முதியவருக்கு மகிழ்ச்சியுடன் பணத்தை வழங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தினார். தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் ஐயர் புதன்கிழமை வெளியே வந்தார். காரில் செல்லும் போது ஒரு தந்தை குழந்தையுடன் ஐயரிடம் சென்று உதவி கேட்டார். ஐயர் உடனே அந்த மனிதரைப் பார்த்துச் சிரித்துவிட்டுத் தன் பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார்.

இதேபோல், ஸ்ரேயாஸ் அவருக்கு அடுத்ததாக மற்றொருவருக்கு உதவினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்களின் இதயங்களை வென்றதாக ஷ்ரேயஸ் ஐயரை பாராட்டி கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஆசிய கோப்பையில் இடம் உண்டா?

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சில காலமாக அணியில் இருந்து விலகியிருந்த ஐயர், தற்போது முழு உடற்தகுதி அடைந்துவிட்டதாக தெரிகிறது. ஐயர் என்சிஏவில் கடுமையாக உழைக்கிறார். ஸ்ரேயாஸ் பேட்டிங் பயிற்சியைத் தொடங்கினார். இதன் மூலம், அவர் ஆசிய கோப்பை-2023ல் மீண்டும் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவருடன் மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலும் மீண்டும் களமிறங்குவார் எனதெரிகிறது. இந்த மெகா நிகழ்வுக்கான இந்திய அணியை ஓரிரு நாட்களில் (ஆகஸ்ட் 20) அறிவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.