ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை ஆகஸ்ட் 20-ம் தேதி பிசிசிஐ அறிவிக்கும் என கூறப்படுகிறது..

ஆசிய கோப்பை 2023 போட்டிகள் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும். இந்த போட்டி 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 50 ஓவர் வடிவத்தில் நடைபெறும். நேபாளம் முதல் முறையாக ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுகிறது.. மொத்தம் 6 அணிகள் (இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம்) சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிடும். ஹைபிரிட் மாடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த 13 போட்டிகளில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் அணிகள் ஆசிய கோப்பை 2023க்கான தங்கள் அணிகளை அறிவித்து விட்டன. அதே சமயம் இந்தியாவுடன் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தங்கள் அணிகளை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், வீரர்களின் காயம் குறித்த அப்டேட்டுக்காக காத்திருப்பதால், பிசிசிஐ அணி அறிவிப்பை தாமதப்படுத்துவதாக தெரிகிறது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை ஆகஸ்ட் 20-ம் தேதி பிசிசிஐ அறிவிக்கும் என தெரிகிறது.எனினும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியடைந்த சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.

காயத்தில் இருந்து மீண்ட நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் முழு உடல்தகுதியை மீட்டுள்ளார். மேலும், பராமரிப்பும் செய்து வருகிறார். இதன் மூலம் 2023 ஆசிய கோப்பையில் ராகுல் விளையாடுவது உறுதியாகத் தெரிகிறது. மெகா போட்டியிலும் ராகுல் கீப்பிங் செய்வார். இன்னொரு பக்கம், ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் 100 சதவீதம் ஃபிட்டாக இல்லை என்று தெரிகிறது. அணி அறிவிப்புக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் ஸ்ரேயாஸ் முழு உடற்தகுதி அடைய வாய்ப்பில்லை.